மளிகை கடை வியாபாரி கொலையில் திடீர் திருப்பம்… 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரிவேஞ்ச் : போலீசார் விசாரணையில் பகீர்…!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 9:00 am

திருச்செந்தூர் அருகே மளிகை கடை வியாபாரி கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்த வேம்படிதுரை (40). இவர் சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர உறவினர் இறப்பிற்கு சொந்த ஊரான வன்னிமாநகரத்திற்கு வந்துள்ளார். இறந்த உறவினர் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் வள்ளிவிளை சாலையில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு, பைக்கில் வீடு திரும்பிய போது, ஏதிரே காரில் வந்த மர்ம நபர்கள் வேம்படிதுரை பைக் மீது ஏற்றியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரானது சாலையோர மணலில் புதைந்து சரிந்து நின்றது. இதனால், கொலையாளிகள் காரை எடுக்க முடியாமல் விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த தாலுகா போலீசார் வேம்படித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 7 வருடங்களுக்கு முன்பு 2016-ம் ஆண்டு வன்னிமாநகரத்தை சேர்ந்த சிவகுரு (எ) சிவலட்சம் கொலை வழக்கில் வேம்படிதுரை கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சிவகுரு (எ) சிவலட்சம் சகோதரர்கள், உறவினர்கள் பழிக்கு பழியாக வேம்படிதுரை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வியாபாரி கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…