கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில் சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான தனியார் நிறுவனத்திலிருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். சென்னை மாதவரம் பகுதியில் உள்ள கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்த சிவக்குமார் என்பவர்தான் மாதேஷிடம் 3 பேரல் மெத்தனாலை விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக ஆளை உரிமையாளர்கள் 5 பேர் மற்றும் சிவக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மெத்தனால் வழங்குவதற்கான உரிமம் உள்ளதா, எப்படி கைமாறியது, இதற்குப் பின்னால் இன்னும் எத்தனை பேர் உள்ளனர்,எத்தனை ஆலைகள் உள்ளது, என்ற பல கோணங்களில் காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடியினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.