பேருந்து நிலையத்தில் அயர்ந்து தூங்கிய இளைஞர்… கேசுவலாக பணத்தை திருடிய நபர்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 2:58 pm

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கிய பணியிடம் சட்டை பையில் இருந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரின் சி. சி. டி. வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை, நீலகிரி,ஈரோடு, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு என பலதரப்பட்ட மக்களும் தினமும் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பயணிகள் சிலர் பேருந்திற்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கவும் செய்கின்றனர்.

அப்படி வந்த பயணி ஒருவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடை மேடையில் படுத்து உரங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், ஏற்கனவே படுத்து உரங்கி கொண்டு இருந்த பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் அமர்ந்து டீ குடிப்பது போல் நடித்து, பின்னர் அங்கேயே தூங்குவது போல் நடித்து கொண்டு இருந்தார்.

சற்று நேரத்தில் பயணி நன்கு ஆழ்ந்த தூங்கிவிட, அருகில் இருந்த மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை எடுத்து, தனது சட்டை பையில் வைத்து கொண்டு மீண்டும் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்,து பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றுள்ளார்.

பின்னர் காலையில் எழுந்து பார்த்த அந்த பயணி பணம் காணமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், தான் படுத்து இருந்த இடத்தின் அருகே இருந்த கடையில் சி.சி.டி.வி கேமராவினை ஆய்வு செய்த போது, இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் பணத்தை இழந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

தற்போது அந்த சி.சி.டி.வி கேமாரவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!