மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி,தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட நான்கு பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட ஐவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: சிங்காரச் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முறைகேடு.. யானை பசிக்கு சோள பொறியா..? ஜெயக்குமார் ஆவேசம்..!!!!
இதனையடுத்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட ஐவர் மீது கடந்த 3 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட நான்கு பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு நால்வரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இருந்த நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் நான்கு பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
This website uses cookies.