அதிமுக – திமுக கவுன்சிலர்கள் மோதல்… பறந்த நாற்காலி… உடைந்தது மைக்… மேட்டுப்பாளையம் நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு!!
Author: Babu Lakshmanan31 October 2023, 8:20 pm
மேட்டுப்பாளையம் நகர மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டுப்பாளையம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. நகரின் பல பகுதிகளில் குப்பை அள்ளுவது தொடர்பாக அதிமுக – திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பொழுது, வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலியை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதில் மைக்குகள் உடைந்து பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்துஅனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறி மன்ற கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
மன்ற கூட்டம் துவங்கி சிறிது நேரத்திலேயே வார்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு மன்ற கூட்டம் பாதியில் முடிவடைந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.