பொள்ளாச்சி டீக்கடைக்காரருக்கு மெக்சிகோ நாட்டு மருமகள் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தமிழ் முறைப்படி திருமணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 3:30 pm

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி கிருஷ்ணவேணி தம்பதியரின் மகன் சாவுத்ரி ராஜ்.

தண்டபாணி அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சாவுத்ரி ராஜ் கோவையில் படிப்பை முடித்துவிட்டு மெக்சிகோவில் வேலை பார்த்து வந்தார்.

சாவுத்திரி ராஜ் அங்கு தன்னுடன் மெக்சிகோவில் வேலை பார்க்கும் டனியலா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள சாவுத்ரி ராஜ் விரும்பி உள்ளார்.

இதனை அடுத்த சாவுத்ரிராஜன் குடும்ப முறைப்படி ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெக்சிகோ நாட்டு மணப்பெண்ணிற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞருக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மெக்சிகோ நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த நிலையில் இரு விட்டாரும் நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர்.வெளிநாட்டு மணப்பெண்ணுடன் நடைபெற்ற திருமணத்தை காண ஊர் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ