‘துணிவு’ அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் ‘வாரிசு’ நம்மவர்தான் ; கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் ஒட்டிய போஸ்டர்கள்!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 11:48 am

கோவை : ‘துணிவு’ அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் ‘வாரிசு’ நம்மவர் கமல்ஹாசன் என எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிமுக வினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், சினிமா துறையினர் அவரது சிலைகளுக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை தெற்கு தொகுதி 80வது வார்டு சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ‘துணிவு’ அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் ‘வாரிசு’ நம்மவர் கமல்ஹாசன் என்ற வாசகங்களுடன், எம்ஜிஆர் உடன் கமலஹாசன் சிறுவயதில் நடித்த ஆனந்த ஜோதி திரைப்பட புகைப்படமும், எம்.ஜி.ஆர் கமலஹாசனுக்கு விருது வழங்கிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளன.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 659

    0

    0