எம்ஜிஆர், ஜெ., புகைப்படத்தை வைத்து பிரச்சாரம்.. குவிந்த கண்டனம : பாஜக நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்த மேலிடம்!!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி வெளியிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மீது கட்சியின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதன்படி பாஜக பிரமுகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து பாஜக பொதுச் செயலாளர் மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில் விஜயபூபதி, ராக் பெட்ரிக், பாபு ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.