வட மாநில தொழிலாளர் மர்மமான முறையில் மரணம்… ரத்த காயங்களுடன் முற்புதரிலிருந்து கிடந்த சடலம் ; போலீஸார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 7:49 pm

சேலத்தில் வட மாநில தொழிலாளர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தத தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் செவ்வாய்பேட்டை அருகே உள்ள நரசிம்ம செட்டிரோடு பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவரின் சடலம் முற்புதருக்குள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விரைந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தோராஜ் அன்சாரி (41) என்ற வடமாநில தொழிலாளர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வராமல் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதிகளவில் மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள் காணப்படுகிறது.

வடமாநில தொழிலாளர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனியார் பருப்பு ஆலையின் உரிமையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இறந்த வடமாநில தொழிலாளர் அருகே இருந்த அவருடைய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றி அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 469

    0

    0