மனைவிக்கு நெஞ்சுவலி… மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவன் உயிரிழப்பு : இப்படியும் ஒரு சாவா?

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 10:48 am

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (46) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவருடைய மனைவி பூங்கொடிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அவரை பாரஞ்சியிலிருந்து கார் மூலமாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்..

அப்போது வேடல் காந்தி நகர் இடையே எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு அப்பகுதியை சேர்ந்த சிலரும் எதிர் தரப்பினருக்கு ஆதரவாக ஒன்று கூடி ராஜ்குமார் மற்றும் அவரது மகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கிய நிலையில் இருந்த ராஜ்குமாரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும் அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை ஒட்டி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை (AISF) சேர்ந்த ஏராளமான நபர்களும், ஊர் மக்களும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகளும், அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடி வருவதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது

தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 527

    0

    0