தமிழகத்தில் இன்று முதல் பால், தயிர் விலை உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 8:57 am

தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் இருந்து 52 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 62 இலிருந்து 64 ரூபாயாகவும், நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 70 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தயிர் (TM Curd) 72 ரூபாயிலிருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?