வேப்பமரத்தில் திடீரென வடியும் பால்… பயபக்தியுடன் வணங்கி செல்லும் மக்கள் : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 2:36 pm

வேப்பமரத்தில் திடீரென வடியும் பால்… பயபக்தியுடன் வணங்கி செல்லும் மக்கள் : வைரலாகும் வீடியோ!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி திருவள்ளுவர் அவென்யூவில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள பழமையான வேப்ப மரத்தில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென்று வடியும் பால். ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கிச் செல்லும் அப்பகுதி பொதுமக்கள்.

பிச்சாண்டார்கோயில் ஊராட்சி திருவள்ளுவர் அவென்யூ வி.என். நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்.15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் பஞ்சமிக்கு உகந்த கோயிலாகும்.சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த கோயிலில் உள்ள பழமையான வேப்ப மரத்தில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென்று பால் வடிந்துள்ளது. இதை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.மேலும் இந்த செய்தியை அறிந்த அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் அதை செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அந்த வேப்ப மரத்தை சுற்றி மஞ்சள் தெளித்து வேப்பமரம் முழுவதும் சந்தனத்தை பூசி அதில் குங்குமமும் வைத்து பத்தி, கற்பூரம் ஏற்றி அதை பக்தியுடன் வழிபட தொடங்கினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 408

    0

    0