தனியார் பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீவிபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்..!!

Author: Rajesh
18 May 2022, 11:10 am

கோவை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உள்ளே இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து கோவைப்புதூர் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின் கசிவு தீவிபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி