தேர்வை உங்கள் திருப்திக்காக எழுதுங்கள்… பெற்றோர்களுக்காக வேண்டாம் : மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
7 March 2022, 6:33 pm

தஞ்சை : மாணவர்கள் பொதுத்தேர்வினை, உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீர்மிகு அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த கூட்ட தொடரில் 27 அறிவிப்புகள் கொடுத்திருந்தோம், அதில் 15 அறிவிப்புகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. மீதி அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்ட தொடரில் புதிய அறிவிப்புகள் வரும். 35% முதல் 50% சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் பாட திட்டங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். பின்னர் திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும். மாணவர்கள் பயப்படாமல் உங்கள் மனநிலைக்கு ஏற்றவாறு தேர்வினை எழுத வேண்டும். உங்களுக்கு என்று ஒரு நாற்காலி காத்திருக்கிறது. பெற்றோர்களுக்காக படிக்காமல், உங்களுக்கு என்ன வருகிறதோ, உங்கள் என்று என்ன தனித்திறமையை இருக்கிறதோ அதை நோக்கி உங்கள் பயணம் அமைய வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியாக படியுங்கள், உங்கள் திருப்திக்காக தேர்வினை எழுதுங்கள் என்று அவர் தெரிவித்தார்

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu