நீங்களே வந்து கேளுங்க.. StateSyllabus குறித்து விமர்சித்த ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர்..!

Author: Vignesh
2 செப்டம்பர் 2024, 5:47 மணி
Minister Anbil Mahesh Poyyamozhi
Quick Share

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியீட்டு விழா திருச்சி தேசிய கல்லூரி பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையிலுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் பணிபுரியும் 4786 ஆய்வக உதவியாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே 2024 இல் பணியிடைபயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 3020 ஆய்வக உதவியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கி பயிற்சி கட்டகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

பயிற்சி விளக்க உரையை இயக்குனர் முனைவர் அமுதவள்ளி வழங்கினார். நிகழ்வில் பள்ளி கல்வி இயக்குனர்(கூடுதல் பொறுப்பு) முனைவர் பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் மதுமதி, தொழில் கல்வித்துறை இணை இயக்குனர் முனைவர் ஜெயக்குமார், திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுகானந்தம், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.மதன்குமார், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.புண்ணியகோட்டி மற்றும் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முருகாம்பாள் மற்றும் தமிழக முழுவதும் இருந்து ஆய்வக உதவியாளர்கள் 2000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Minister Anbil Mahesh Poyyamozhi

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொய்யா மொழி ஒருங்கிணைந்த கல்வி மூலமாக ஒன்றிய அரசு விதி வழங்கிக் கொண்டுள்ளது இந்த வருடம் நிதி 2153 கோடி நிதியை வழங்கவில்லை. இதனால், கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரை இரண்டு முறை சந்தித்து கருத்துகளை தெரிவித்தோம். இது குறித்து பார்த்து சொல்கிறோம் என கூறினார்.

மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு சந்தித்து நிதி வரவில்லை என கூறினோம். நீங்கள் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்துட்டாள் அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்குவராக தெரிவித்தார். நாங்கள் 3 , 5 , 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மும்மொழி கொள்கை, குலக்கல்வி திட்டம் மறைமுகமாக கொண்டுவதுவது உள்ளிட்ட
பாதகங்களை கூறியும் நீங்கள் யோசித்துக் கூறுங்கள் என சொல்லிவிட்டார். இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர் என்ன கூறுகிறாரோ அதை சார்ந்து எங்கள் நடவடிக்கை இருக்கும்.

ஆளுநர் மாநில பாடம் திட்டம் குறித்து கூறிய கேள்விக்கு ?

பள்ளி நூலகங்களில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் ஆறாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை உள்ள மாநில பாடப் புத்தகத்தில் இருந்து தான் படிக்கின்றனர். யுபிஎஸ்சி முதற்கொண்டு மாநில பாட புத்தகத்தில் தான் படிக்கின்றனர். வேண்டுமென்றால் ஆளுநரை அழைத்துச் சென்று போகிறேன். அங்கு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் அவரை கேள்வி கேட்கட்டும் என்றார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 139

    0

    0