தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையா…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!!

Author: Babu Lakshmanan
22 October 2022, 6:27 pm

திருச்சி : தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையா..? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்டத்தின் தொலைநோக்கு திட்ட ஆவண வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், விமான மூலம் சென்னை புறப்படுவதற்கு விமான நிலையத்திற்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

anbil mahesh - updatenews360

அப்போது, தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த கேள்விக்கு, ‘ஆசிரியர்கள் மட்டுமல்ல, அனைத்து அரசு ஊழியர்களும் இருப்பதால், தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்ல முடியாது,’ என தெரிவித்தார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?