அமைச்சர் அன்பில் மகேஷ் WASTE..எங்க தொகுதிக்கு எதுவும் செய்யல… அவருக்கு ஓட்டு போடாதீங்க… வைரலாகும் விசிக பிரமுகரின் ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 8:39 am

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்த விசிக பிரமுகர் மற்றும் எம்ஜிஆர் பக்தன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது செயல்பாடுகள் திருவெறும்பூர் தொகுதி திமுக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைமை இடத்தில் மிகுந்த நெருக்கமாக இருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில சீனியர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமலும், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் யாரையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் திமுக நிர்வாகிகள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் இந்த அமைச்சரால் திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை, ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. நாங்கள் பெல் நிறுவனத்தில் 45ஆண்டு காலமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம் எங்கள் கோரிக்கையை எவ்வளவு கொடுத்திருக்கிறோம். அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் இனிமேல் அவருக்கு ஓட்டு போட மாட்டோம் நாங்க நோட்டோவுக்கு தான் ஓட்டு போடுவோம். அவர் இனிமேல் இந்த தொகுதியில் எம்.எல்.ஏவுக்கு நிற்க வேண்டாம்னு சொல்லுங்க. வேஷம் போடுகிறார் என விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி இளந்தமிழனின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே போல் இளந்தமிழனின் ஆடியோவிற்கு வலு சேர்க்கும் விதமாக மற்றொரு ஆடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் கமிஷன் காசில் அமைச்சர் கொண்டாட்டம் போட்டு வருகிறார்.

திருச்சி மக்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவதில்லை. அவர் பெரிய நடிகராகவே உள்ளார். அவர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் பேனரில் படம் காட்டுவதுமாக உள்ளார். அவர் ஒரு சின்ன செந்தில் பாலாஜி போல் செயல்படுகிறார்.

அதனால் அவரை யாரும் நம்ப வேண்டாம் என சந்திரசேகர் என்பவர் வெளியிட்டுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் பக்தன் என்ற பெயரில் ஒருவர் இப்படி ஒரு பேசியிருந்தாலும், திமுக கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ திருவெறும்பூர் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இளந்தமிழன் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவர் மீது பெல் காவல் நிலையத்தில் திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?