ஜில்லா பட பாணியில் அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் போஸ்டர் : ஒரே மாதத்தில் இருவருக்கும் பிறந்தநாள்.. ஆரவாரத்தில் ஆதரவாளர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2022, 9:55 pm
திருச்சியில் கலக்கும் சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா – ஜில்லா பட விஜய் மோகன்லால் யை மிஞ்சிய திருச்சி அமைச்சர் மற்றும் அவரது மகனின் போஸ்டர்.
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பிறந்த நாள் வரும் 09தேதி திமுகவினர் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக திருச்சி மாநகரில் உள்ள பல பகுதிகளில் திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள், பிளக்ஸ் வைத்துள்ளனர்.
இதற்கிடையில் அடுத்த மாதம் 12ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காகவும் வாழ்த்து பதாகைகள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக திருச்சி தென்னூர் மேம்பாலத்துக்கு கீழ் பிறந்தநாள் வாழ்த்து பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை மற்றும் அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாடும் கே.என்.நேரு அவரது மகன் அருண் நேரு வாழ்த்து தெரிவித்து விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஐப்பசியில் பிறந்த நாயகரே, கார்த்திகையில் பிறந்த காவியமே என்ற வசனத்துடன் தென்னூர் பகுதியை இளைஞர்களான குரு, நவநீதன், திவாகர், ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து ஜில்லா படத்தில் சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா என்ற பாடலின் போது நடிகர் விஜய் மோகன்லால் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டது போல் உள்ள புகைப்படத்தை போல அமைச்சர் கே.என்.நேரும் அவரது மகன் அருண் நேருவும் இருப்பது போல் பதாகையில் வைத்துள்ளனர்.
இதனை அவ்வழியாக செல்வோர் ஒரு நிமிடம் நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர். நடிகர்களின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வந்த நிலையில், இந்த மோகம் தற்போது அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்களிடம் பெருகி வருகிறது.