ஜெயிக்க போறது நாங்கதான்.. ‘இந்தியா கூட்டணி’ அமோக வெற்றி பெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி..!

Author: Vignesh
31 May 2024, 5:32 pm

பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். இதில் தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

anitha radhakrishnan

மேலும் படிக்க: தனியாக செல்லும் பெண்கள் தான் டார்கெட்.. YouTube-ஐ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினியர்..!

அப்போது அவர் பேசுகையில், ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை தெற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக கழக கொடி ஏற்றி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார். மத்தியில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகளை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் வழங்கினார்.

anitha radhakrishnan

மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது… புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

இக்கூட்டத்தில் ஜூன் 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவை பேரெழுச்சியுடன் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தெற்கு மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அலுவலகங்கள், சார்பு அணிகளின் அலுவலகங்கள் அனைத்து கிளை பகுதிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை அலங்கரித்து மாணவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், அனைத்து ஊராட்சிகளிலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாத்துகளிலும் ஒலிபெருக்கி அமைத்து திமுக கழக கொடியேற்றி ஏழை எளியவருக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்றும், பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள், இரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மரக்கன்று நடுதல் போன்ற சமூக பணிகளிலும் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, திமுக வர்த்தகரணி இணைச்செயலாளர் உமரி சங்கர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 436

    0

    0