ED வசம் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் : படியேறிய அமலாக்கத்துறை… கிடைக்கும் கிரீன் சிக்னல்?!!!
Author: Udayachandran RadhaKrishnan11 அக்டோபர் 2023, 7:16 மணி
ED வசம் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் : படியேறிய அமலாக்கத்துறை… கிடைக்கும் கிரீன் சிக்னல்?!!!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறது என அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, 2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காக அமலாக்கத்துறை பதிவு செய்தது. மேலும், இந்த சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் அமைச்சர் மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவில்லை என வும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, தங்களையும் ஒரு தரப்பாக அமைச்சர் மீதான வழக்கில் இணைக்குமாறு தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கானது தற்போது 90% முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், அமலாக்கத்துறை தரப்பில், இந்த வழக்கில் எங்களையும் எதிர் மனுதாரராக சேர்த்து, விசாரிக்க அனுமதி தர வேண்டும் என்று தெரிவித்த நிலையில், வரும் 1ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0
0