அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்க… காவல்துறையினருக்கு அமைச்சர் துரைமுருகன் க்ரின் சிக்னல்..!!

Author: Babu Lakshmanan
10 June 2022, 5:31 pm

ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்ய குழு அமைத்தது வரவேற்கத்தக்கது என்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் நகர புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கியதுடன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மாநகராட்சியின் கண்காணிப்பு அறையையும் அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,மாநகராட்சி மேயர் சுஜாதா ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றவாளிகள் எந்த பகுதியில் நடமாடினாலும், அவர்களை காட்டிகொடுக்கும், வாகனங்களின் எண்ணும் தெளிவாக காட்டும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற நடவடிக்கைகளை தடுக்கலாம்.

இதன் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்திருப்பது வரவேற்கதக்கது. படித்தவர்களே பாழுகும் கிணற்றில் விழுவதை பார்த்து கவலைப்படுகிறோம். பொதுமக்கள் மத்தியில் ஏன் இதை தடை செய்ய கூடாது என்ற எண்ணம் வந்துள்ளதால், இதனை தடை செய்துள்ளதை பாராட்டுகிறோம்.

தலைக்கவசம் அணிவதன் மூலமாக பல்வேறு நன்மைகளும் ஹெல்மட் அணியாததால் உயிரிழப்புகளும் ஏற்படும். மேலும், சுய நினைவை இழந்து கோமா நிலைக்கு செல்லும் நிலைமையும் பல ஆண்டுகள் மருத்துவமனையில் இருக்கின்றனர். கைகால்கள் வரவில்லை. ஹெல்மட் இல்லாமல் ஓட்டுவது ஸ்டைலாக நினைக்கின்றனர். ஆனால், காதில் ஹேட் செட் போட்டுகொண்டு பேசிகொண்டு செல்கின்றனர். இதனாலும் விபத்துகள் ஏற்படுகிறது.

ஒரு நாட்டின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பளிப்பது போலீஸ் தான். தேவலோகத்திலும் போலீஸ் இருக்கிறது. இதனை சமூக விரோதிகள் எதிர்ப்பார்கள். சமுதாயத்தில் நல்லவர்கள் போலீஸ் ஒழிக என்ன சொல்கிறார்களா..?, கேட்டவர்கள் தான் சொல்கிறார்கள். சென்னையில் அதிக அளவில் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுங்கள்.

வேலூர் உள்ளே வரும் எந்த வண்டியும் தற்போது அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து குற்ற செயலை தடுக்க முடியும். குஷ்பு கோவில் கட்டும் போது எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டினால் என்ன, என்று கூறினார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?