‘நாங்க, என்ன உங்க வீட்டு குப்பையா..?’ எங்களை ஒன்னும் பண்ண முடியாது ; பிரதமர் மோடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்..!!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 7:42 pm

எங்களை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளார்கள் என்றும், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் இண்டூரில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்கூடத்தில் திமுக கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று தருமபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற திமுக பரப்புரையாற்றினார்.

மேலும் படிக்க: அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு.. கோவை, திருப்பூரில் பரபரப்பு…!!!

அப்போது அவர் பேசியதாவது : நமக்கும் டெல்லிக்கும்தான் போட்டி. மோடி சொல்கிறார் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவை துடைத்து எறிவேன். மூட்டை பூச்சி போல நசுக்கி கொன்னு எரிந்து விடுவேன் என கூறினார். இது முடியாத காரியம். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு பேசலாமா..?

நாங்கள் என்ன உங்க வீட்டு குப்பையா..? எங்களை அழிக்கணும்னு நினைத்தவர்கள் எல்லாம் தற்போது குலோசாகி விட்டார்கள், என அவர்பேசினார். இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பழநியப்பன், எம்பி செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!