அத்திக்கடவு – அவிநாசி, சர்பங்கா திட்டங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் உறுதி

Author: Babu Lakshmanan
13 September 2022, 6:10 pm

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மற்றும் சர்பங்கா திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு தகுதி நடவடிக்கை எடுத்து வருகிறது என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை, விண்ணம்பள்ளி, பொன்னை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 448 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று விலை இல்லா மாநில மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர், காட்பாடி பகுதியில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வள்ளி மலையில் அரசு கலைக் கல்லூரி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்வேறு திட்டங்களை காட்டிலும் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டுமென அவர் கூறினார்.

பெண்கள் பயில்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசு கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மற்றும் சர்பங்கா திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகளை துவக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை வருகிறது.

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் பொய்யான தகவல். அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, என அவர் கூறினார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 758

    0

    0