ஆளுநருக்கு கொஞ்ச நாளா மனநிலை சரியில்லையோ? அமைச்சர் துரைமுருகன் சந்தேகம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2025, 11:57 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் ஜி.என் நகர் பகுதியில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் ரூபாய் 9.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதையும் படியுங்க: இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?

இதே போல் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நியாய விலை கடையநையும் திறந்து வைத்தார்

முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவோரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு காந்தி கேலி செய்யப்பட்டார்; காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியை அருங்காட்சியக மூலையில் நடத்துவதில் அர்த்தமுள்ளதா? என ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார் என கேட்டதற்கு, ஆளுநர் ஆர் என் ரவிக்கு கொஞ்ச நாளாக சரியில்லை அவர் அப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்.

Minister Duraimurugan Talk About Governor RN Ravi

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டம் வைத்துள்ளனர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது வரட்டும் பிறகு பார்க்கலாம் என கூறினார்

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி