சாலையோர டீக்கடைகயில் வேட்பாளருடன் உளுந்துவடை சாப்பிட்ட அமைச்சர் : வாக்கு சேகரித்த போது ருசிகரம்..!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2024, 11:21 am
சாலையோர டீக்கடைகயில் வேட்பாளருடன் உளுந்துவடை சாப்பிட்ட அமைச்சர் : வாக்கு சேகரித்த போது ருசிகரம்..!!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளராக திமுக கூட்டணியில் உள்ள அங்கம் வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்
இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தொகுதியான ஆத்தூர் தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வேட்பாளருடன் அமைச்சர் பெரியசாமி பிள்ளையார் நத்தம் பஞ்சம்பட்டி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வீதிவிதியாக சென்று சிபிஎம் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
மேலும் சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டே அங்கு இருந்தவர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்
திமுக கூட்டணி கட்சியினர் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்