முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை அதுக்கு வாய்ப்பே இல்ல ; அடித்து சொல்லும் அமைச்சர் ஐ.பெரியசாமி..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 4:53 pm

முதல்வராக ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் உணவுப்பொருட்கள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின மாநில அளவிலான விழா திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி , தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கேடயம், சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கினார்கள். மேலும், நியாயவிலைக் கடைகளில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர்கள் எடையாளர்களுக்கு ரொம்ப பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- மக்களுக்கு தேவையான உணவு, கல்வி போன்ற திட்டங்களை கொண்டு சேர்ப்பது குறித்து முதல்வர் பயணம் இருக்கிறது. 24 மணி நேரமும் மக்களை பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறார் தமிழக முதல்வர். அவருடைய சிறப்பான பயணம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. எதுவும் தடுக்க முடியாது. எவ்வளவு பெரிய சக்தி வந்தாலும், அரசு மக்களுக்கு கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை தடுக்க முடியாது.

இந்த நாட்டில் 120 கோடி மக்களில் சாதாரண குடிமகனாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் அனைவரும் சட்டத்திற்கு முன் சமம். யாரு வேண்டுமானாலும் பேசலாம். சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை உள்ளது. கருத்து சுதந்திரம் இருக்க கூடிய கட்சி ஒன்று இருக்கிறது என்றால் அது திமுக தான். எங்களைப் பொறுத்தவரை கொள்கை லட்சியத்தில் உறுதியாக உள்ளோம். எல்லா ஜாதியும் எல்லா மதமும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.

எந்தக் கலவரம் தமிழ்நாட்டில் வராது. இந்தியாவில் தமிழ்நாடு அமைதி பூங்காவா தான் இருக்கும். முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும். சட்ட ஒழுங்கு எல்லோருக்கும் சமமாக பங்கிடப்படும். சாமியார் எதுக்கு கருத்து சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

தாய்மாருக்கு இன்னும் ஏழு நாட்களில் மாத உதவித் தொகை ரூ ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் சொன்ன வாக்குறுதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றி உள்ளார், என தெரிவித்தார்

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!