அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு என்னாச்சு? மதுரை மருத்துவமனையில் திடீர் அனுமதி.. காரணமே இதுதான்!!
Author: Udayachandran RadhaKrishnan29 September 2023, 10:00 pm
அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு என்னாச்சு? மதுரை மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்!!
திண்டுக்கல்லில் உள்ள தனது இல்லத்தில் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்திருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி மேல் சிகிச்சைக்காக ஐ.பெரியசாமி வழக்கமாகச் செல்லும் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமி அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளைக் களையும் பொருட்டு ‘ஊராட்சி மணி’ என்ற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் 155340 ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வுகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றிருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை கருணாநிதியின் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒருவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.