அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் விசிட்: ஹாஸ்டலில் வார்டன் இல்லாததால் அதிருப்தி…அதிகாரிகளுக்கு வார்னிங்!!

Author: Rajesh
16 March 2022, 9:26 pm

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் தங்கும் விடுதியை தமிழக ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது விடுதியில் வார்டன் இல்லாததால் அமைச்சர் அதிருப்தி அடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலையில் பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை அதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்கு மாணவர்களுக்கு உணவு செய்யப்படும் சமையல் அறையை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு பல நாட்கள் உணவு செய்யாமல் இருந்ததால் அந்த அறை இருண்ட குகை போல் காட்சி அளித்தது.

பின்னர் சமையலர் திருகுமரனை அழைத்து வார்டன் இருக்கிறாரா இல்லையா என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த அமைச்சர் சமையலறை தனி அறையில் அழைத்து சென்று விசாரித்தார்.

பின்னர் வெளியே வந்த அமைச்சர் பேசும்போது, தவறு செய்யும் பட்சத்தில் யாராக இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1322

    0

    0