50 வருடம் ஆனாலும் திமுகவை அசைக்க முடியாது என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கொடியேற்றி, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் தி.மு.கவின் 100வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுகவின் சார்பாக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து 80 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் லீலாவேலு, மாமன்ற உறுப்பினர்கள் கழகத்தினர் நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது :- அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். சிலர்கள் செயல்படுவார்கள், ஆனால் பேசத் தெரியாது. எல்லாம் ஒரு சேர அமைந்திருப்பவர் மகேஷ் பொய்யாமொழி.
தலைவர் எல்லா மாவட்டங்களிலும் 100 கொடிகள் ஏற்ற வேண்டும் அறிவித்தார். ஆனால் நாங்கள் பின்தங்கி தான் உள்ளோம். ஆனால் திருச்சியில் மகேஷ் பொய்யாமொழியோ அதை எட்டி விட்டார்.
நம் கட்சியை நினைக்கும் போது ஒரு பெருமை. உன் தலைவர் யார்? கலைஞர், கலைஞருக்கு பிறகு யார் தலைவர் தளபதி நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். பிறகு உதயா. இந்த கட்சியை 50 வருடத்திற்கு யாராலும் அசைக்க முடியாது. இந்த இயக்கம் மக்களுக்கான இயக்கம், தமிழ் சமுதாயம் உணர்வோடு வாழ வேண்டும் என்றால் இந்த இயக்கம் இருந்தாக வேண்டும், என பேசினார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.