வேட்டியை மடிச்சு கட்டி.. புல்லட் பைக்கில் வந்த அமைச்சர் கேஎன் நேரு : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan16 December 2023, 8:04 pm
வேட்டியை மடிச்சு கட்டி.. புல்லட் பைக்கில் வந்த அமைச்சர் கேஎன் நேரு : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
திமுகவில் இப்போது இருக்கும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் கே. என். நேரு.. நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக இருந்த நேரு தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.
கே என் நேரு கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நேருவின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நேற்று ‘அடுத்த முதல்வரே நீங்கதாண்ணே’ என்று புரோகிதர் சொல்ல அதற்கு அவர் பதறிப்போனார். இதற்கிடையே இப்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சேலத்தில் இன்று புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு அமைச்சர் நேரு சென்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக 2ஆவது இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. வரும் டிச.24ஆம் தேதி இந் மாநாடு நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடக்கும் இடம் ரெடியாகி வருகிறது. மாநாட்டிற்கு வந்தவர்கள் அமரும் இடம், தேவையான அடிப்படை வசதிகள் என அனைத்தும் ரெடியாகி வருகிறது.
இந்த பணிகளை அமைச்சர் நேரு ஸ்டைலாக புல்லட் பைக்கில் சென்று ஆய்வு செய்தார். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு புல்லட்டில் ஏறிய அவர் மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில் தான் நேருவின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.