ஆழியார் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறுத்தப்படுகிறதா..? அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
Author: Babu Lakshmanan3 September 2022, 4:08 pm
ஆழியார் கூட்டுக் குடிநீர் திட்டம் முதலமைச்சர் ஸ்டாலினால் துவங்கப்பட்டதாகவும், இத்திட்டம் எதற்காகவும் நிறுத்தப்பட மாட்டாது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திண்டுக்கல் மற்றும் தேனி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே என் நேரு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தலைவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு பேசும் பொழுது ;- ஆழியார் கூட்டுக் குடிநீர் திட்டம் தமிழக முதல்வரால் 930 கோடி செலவில் துவக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் எதற்காகவும் நிறுத்தப்பட மாட்டாது .
மேலும், திண்டுக்கல் மாநகராட்சியில் 10 கோடியே 15 லட்சம் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் சொத்து வரி, பிணைய வைப்புத் தொகை, சாலையோர கடைகளுக்கு ஒப்பந்தம் விடாதது கட்டிட விரிவாக்க பணிகள் போன்றவற்றில் தணிக்கை துறையால் இழப்பீடு ஏற்பட்டுள்ளது, எனக் கூறினார்.
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தனக்குத் தெரியாது என்று பதில் அளித்தார். மேலும் மாநகராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகளால் தொடர்ந்து மாநகராட்சியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு, ஆய்வு செய்யப்படும் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன், பழனி வேடசந்தூர் மற்றும் தேனி சட்டமன்றத் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்