தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதை நிறுத்தியது ஏன்? அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2022, 12:31 pm

தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆண்டுகளாக திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள்
மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் பெற முடியாமல்
பணிகள் நிறைவடையாமல் இருந்து வந்தது.

தற்போது அந்த நிலத்தை பாதுகாப்புத்துறை வழங்கியதால் இன்று அப்பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து பாலம் கட்டும் பணிகளை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே என் நேரு, பழைய முயற்சி மேற்கொண்டும். எங்களுடைய முயற்சியால் பத்தாண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த அரிஸ்டோ மேம்பாலம் பணி இன்று துவங்கியது. இப்பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவு பெறும்.

பேருந்து கட்டணம் உயரப் போகிறது என்பது குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த அமைச்சர் இருக்கிறார். இது தொடர்பாக முடிவு செய்து உங்களிடம் அறிவிப்பார்கள்

சென்னையில் வரி உயர்த்தி, 22ஆண்டுகள் ஆகின்றன. மற்ற ஊர்களில், 13 ஆண்டுகள் ஆகின்றன. 1998 நாங்கள் இயற்றிய சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால், அந்த சட்டத்தை ஆந்திரா எடுத்துச் சென்று அமல்படுத்திவிட்டது.

அதன்பிறகு, 2008 ஆண்டு இயற்றிய சட்டத்தை அதிமுக தேர்தலுக்காக கிடப்பில் போட்டுவிட்டனர். ஒட்டுமொத்தமாக, 10ஆண்டுகளுக்கான வரியை உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் ஆண்டுக்கொரு முறை வரி உயர்வை அமல்படுத்தியுள்ளோம்.

ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறுகின்றனர். மக்களுக்கு நன்மை செய்யவே இந்த சட்டத்தை இயற்றியுள்ளோம்.

ஆண்டுதோறும் வரி உயர்வு, மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்வதற்காக இல்லை. நகர்ப்புற அமைப்புகள் நிதிவளம் பெற்று, தன்னிச்சையாக செயல்பட இந்த சட்டம் உதவும்” என்றார்.

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் கூறியபடி, அரசு அதிகாரிகளை தடுத்தால் அவர் மீது வழக்குப் பாயும்.

திருச்சி விமான நிலையம் நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலைய நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கி விட்டனர்.

திருச்சி விமான விரிவாக்கத்திற்காக, எங்களிடம் இருக்கும் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் வேண்டுமானால், அதை அந்த தனியாரே கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என கூறினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, கதிரவன், திருச்சி மாநகராட்சி
மேயர் அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி, மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 1229

    0

    0