மருத்துவ நிர்வாகத்தில் குறை சொல்லுங்க ஒத்துக்கிறோம்… ஆனால், இதை மட்டும் சொல்லாதீங்க ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 12:52 pm

பணிச்சுமை காரணமாக இறந்து போகிறார்கள் என்ற கற்பனை கதையை தூண்டிவிடுவது நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிஸில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். உடன் அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- 71 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சென்னை பல் மருத்துவக் கல்லூரியில், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிகமானோர் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில் 25.31 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவக் கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவருந்தும் கூடம், எல்ஈடி திரையரங்கத்துடன் கூடிய கலையரங்கம், சலவையகம், மாணவர்களுக்கு ஓய்வெடுக்கும் அறை, நோயாளிகளுக்கு ஆரோ வாட்டர் சிஸ்டம் உள்ளிட்ட ஏழு திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

மாணவர்களுக்கான தங்கும் விடுதி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 64.90 கோடி மதிப்பில் 620 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்படவுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் ஜனவரி இறுதியில் தொடங்கப்பட உள்ளது. அதோடு, 135 கோடி செலவில் ராஜுவ்காந்தி முதுநிலை மாணவர்களுக்கான விடுதியும் இந்த வளாகத்தில் கட்டப்படவுள்ளது” என்று கூறினார்.

அப்போது, தஞ்சாவூர் மருத்துவ மாணவர் இறப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அமைச்சர் சுப்பிரமணியன், “பணிச்சுமை காரணமாக இறந்து போகிறார்கள் என்ற கற்பனை கதையை தூண்டிவிடுவது நிறுத்த வேண்டும். நீங்கள் போய் தஞ்சாவூரில் கேளுங்கள்… மருத்துவ நிர்வாகத்தை தவறு சொன்னால் பொறுப்பேற்று கொள்கிறோம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜே என் 1 என்ற கொரோனா ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. இது மிதமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. எனவே அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாட்டில் மருத்துவனைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் முழுமையாக நிறைவடையும். பொங்கலுக்கு முன்னதாக 1,021 மருத்துவப் மருத்துவர்கள் பணியிடங்களுக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்க இருக்கிறார். இது குறித்த முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன, என்றார்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?
  • Close menu