மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி… விமான நிலையங்களில் செல்லாது… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்

Author: Babu Lakshmanan
14 May 2024, 4:09 pm

மஞ்சள் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் போடப்பட்டும் தடுப்பூசி விமான நிலையங்களில் ஏற்றுகொள்ளப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தர்பூசிணி, கிர்ணி பழம் மற்றும் மோர் ஆகிய நீர் ஆதாரங்களை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும் படிக்க: ‘சிப்ஸ் ஏன் இவ்வளவு தூளாக இருக்கு..?’…. சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள்.. வைரலாகும் வீடியோ!!

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அப்போது அவர் பேசுகையில், ” கோடைகாலத்தில் தண்ணீர், நீர், இளநீர், தர்பூசணி, கீரணிப்பழம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகளுக்கும் செல்வதற்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

அப்போது, தான் விமான நிலையத்தில் அந்த நாடுகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கும். அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும் போதும், இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்காக, கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ஏற்கனவே இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு வந்தது. அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு அவர்கள் அந்த வைத்து வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் தனியார் மருத்துவமனையில் மஞ்சள் வேக்சினேஷன் போடும்போது, அதை விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை.

கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டிருப்பது போல, துறைமுகம் மருத்துவமனை வளாகத்திலும், அதே போல, தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் இருக்கக்கூடிய அந்த மையத்திலும், மஞ்சள் வேக்சினேசன் போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த வேக்சினேஷன் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த இடங்களில் வேக்சினேஷன் போட்டு கொள்ளவும் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் போல் இல்லாமல் டெங்கு காய்ச்சல் மிகப் பெரிய கட்டுப்பாட்டில் இருக்கிறது. காய்ச்சல் வரும் பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வீட்டிலே சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும், என கூறினார்.

பன்னிரண்டாம் வகுப்பில் இந்த ஆண்டு ஏழு லட்சத்தை 60 ஆயிரத்து 606 பேரில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் தேர்ச்சி பெற தவறியவர்கள் 51 ஆயிரத்து 919 பேர் மாணவர்கள். இதில் மாணவர்கள் 32,164 பேரும், மாணவிகள் 19 ஆயிரத்து 755 தேர்ச்சி பெற தவறி இருக்கிறார்கள் எனவும் கூறினார். இதற்கு 104 என்கின்ற எண்ணின் மூலம் மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம். இந்த தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்ட வருகிறது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 2021 இல் இருந்து இந்த ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 51 ஆயிரத்து 919 மாணவர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 137 பேர் வருத்தத்தில் இருப்பதாக மன உளைச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்களை தொடர்ச்சியாக துறையின் சார்பில் மனநல ஆலோசகர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கி வருகிறார்கள் என தெரிவித்தார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?