நெப்போலியனால் பாதுகாக்கப்படுகிறாரா இர்ஃபான்? அமைச்சரின் மாற்று பேச்சு!

Author: Hariharasudhan
13 November 2024, 12:45 pm
Quick Share

தொப்புள்கொடி விவகாரத்தில் சிக்கிய இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது அரசியல் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: பிரபல யூடியூபரான இர்ஃபான், ஹோட்டல்களுக்குச் சென்று அங்கு உள்ள உணவு குறித்து கருத்தை வீடியோவாக பதிவிட்டு வந்தவர். இவர், கடந்த ஆண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிபா என்பவரை திருமணம் செய்தார். பின்னர், தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் இருந்து வீடியோ மூலம் விழா எடுத்து அறிவித்தார், இர்ஃபான்.

ஆனால், இந்தியாவில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது குற்றம் என்பதால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, மன்னிப்பு கோரி வீடியோ பதிவிட்டார் இர்ஃபான். இதனையடுத்து, இந்த விவகாரம் புஸ்வானமாக போனது.

இதனையடுத்து, சமீபத்தில் தனக்கு பிறந்த குழந்தையின் பிரசவ அறை வீடியோ ஒன்றை இர்ஃபான் வெளியிட்டு இருந்தார். அதில், தொப்புள்கொடியை இர்ஃபான் அறுப்பது போன்ற காட்சி இருந்தது. இது இந்திய மருத்துவச் சட்ட விதிகளுக்கு புறம்பானது என மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, இதற்கும் மன்னிப்பு மற்றும் விளக்கக் கடிதத்தை இர்ஃபான் மருத்துவத் துறைக்கு அனுப்பினார். இதனிடையே, ’இந்த முறை மன்னிப்பே கிடையாது’ எனக் கூறினார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதேநேரம், இர்ஃபான் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

MA SUBRAMANIAN

அது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு 10 நாட்கள் செயல்பட தடை விதித்த அரசு, அம்மருத்துவமனை நிர்வாகத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, “இர்ஃபானுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது ஒன்றும் கொலைக் குற்றமில்லை. இது பெரிய விசயமும் அல்ல” எனக் கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இதையும் படிங்க: மாமூல் தர மாட்டியா? பெண் பழ வியாபாரி கொடூர கொலை!

முன்னதாக, மத்திய இணை அமைச்சராக இருந்த நடிகர் நெப்போலியனின் வெளிநாட்டு இல்லத்திற்கு விசிட் அடித்த இர்ஃபான், அவர்களது குடும்பத்தில் ஒருவராக மாறினார். இது தொடர்பாகவும், அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார்.

தற்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரான நெப்போலியன், திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். எனவே, ஆளும் திமுக அரசின் மூலம் நெப்போலியன் உதவி உடன் இர்ஃபான் தப்ப வைக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 70

    0

    0

    Leave a Reply