வருமான வரித்துறை சோதனை ஒரு அரசியல் நாடகம்… அவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாதா..? அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 2:43 pm

அமைச்சர் எவ வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு வீடு, அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :- 28 மசோதாக்கள் காத்திருக்கிறது. அதனை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் கேரளம் அரசு நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது.

மக்கள் பணியை செய்யவிடாத ஒன்றிய அரசு, மக்கள் பணியை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளது. இது ஒரு அரசியல் நாடகம்.

பா.ஜ.க.,வினர் அவர்களை பற்றியும், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கும் பொருந்துமா..? என்று பார்க்க வேண்டும். ஏன் பொருந்தவில்லை என்றும் பரிசீலிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!