காங்கிரஸ் அப்படி பண்ணி இருக்கக்கூடாது.. ரொம்ப பெரிய தவறு ; பாஜகவுடனான மோதல் விவகாரம்.. அமைச்சர் மனோதங்கராஜ் ஓபன் டாக்!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 12:06 pm

நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் மோதல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிள்பாறை சமத்துவபுரத்திலுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பேச்சிப்பாறை சமுத்துவபுரத்திலுள்ள 98 வீடுகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தளிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு 98 பயனாளிகளுக்கு நிலத்திற்காக பட்டா வழங்கினார்.

அதை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது :- ஜனநாயக நாட்டில் போராட்டங்களை முன்னெடுப்பது சாதாரண விஷயம். இதில், காங்கிரஸார் அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தவறு. அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. சட்டத்தை கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை.

குமரி மாவட்டத்தில் சிலர் சட்டத்தை கையிலெடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அரசு சட்டபடி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ, அதை பாரபட்சமின்றி எடுக்கும். அலூவுதீன் அற்புத விளக்கு போல சில விஷயங்கள் நடைபெறும். கோதையாறு – பேச்சிப்பாறை சாலை என்பது நீண்ட கால பிரச்சினை. வனத்துறையின் சாலையை மின்சார வாரியம் பராமரித்து வந்தது. வனத்துறையிடமிருந்து சாலையை நெடுஞ்சாலைதுறைக்கு மாற்றுவதென்பது மிகபெரிய நிர்வாக பிரச்சினை. எனினும், நெடுஞ்சாலைத்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து சாலை சீரமைக்க ஆயத்தகட்ட பணிகள் நடைபெறுகிறது.

நீதிமன்றங்களை பற்றி விமர்சிக்க கூடாது என்பது நடைமுறையில் இருக்கிறது. எனினும் அந்த விமர்ச்சனைங்களை தாண்டி போகக்கூடிய சூழலும் உருவாக்கி வருவது வேதனையளிக்கிறது. தகவல் உரிமை என்பது அனைவருக்குமான ஒன்று. என்னுடைய கல்வி என்ன என்று கேட்டால், அதற்கு பதிலளிப்பதில் எந்த தவறும் இல்லை. ஒன்றிய அரசின் மிகபெரிய குற்றாசாட்டு என்பது அனைத்தையும் மூடி மறைப்பது தான்.

அதானி, அம்பானி, நீரவ் மோடி போன்றவர்கள் செய்கின்ற தவறுகளை மூடிமறைக்கும் அரசாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. பிரதமரின் கல்வி குறித்து கேட்பது எந்தவித்திலும் தவறில்லை, எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பத்பநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ் மாவட்ட பழங்குடியின நல்வாழ்வு குழு உறுப்பினர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 405

    0

    0