இது அரசியல் உள்நோக்கம்.. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 2:22 pm

அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். பாளையம் பகுதியில் சாலைபணிகளை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- அமலாக்கத்துறையின் சோதனை என்பது மேற்கு வங்கம் முதல் தமிழகம் வரை பா.ஜ.க., இல்லாத மாநிலங்களில் உள்நோக்கத்தோடு, குரோத பார்வையோடு மத்திய அரசு, அமலாக்கத்துறை போன்றவைகளை பயன்படுத்தி சோதனைகளை நடத்துகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும். அமலாக்கத்துறை சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர், என கூறினார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!