நகரங்களுக்கு நிகரான வளர்ச்சி கிராமப்புறங்களில்… இதுதான் திராவிட மாடலின் இலக்கு : அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 6:09 pm

கோவை ; நகரில் உள்ள வளர்ச்சியை கிராமப்புரங்களில் அளிக்க வேண்டும் என்ற திராவிட மாடல் இலக்கை நோக்கிச் செல்வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் “ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான்” இறுதி போட்டிகள் இன்று துவங்கியது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகளில், 210 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :- தமிழகத்தில் அதிகளவு திறன் மேம்பாடு போட்டிகள் நடத்த தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இ-சேவை பணிகளையும் தீவிர படுத்தியுள்ளோம். சாதாரண மக்களுக்கும் எளிய முறையில் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தகுதியில்லாதவர்களுக்கு திட்டம் கிடைக்கிறது. அதே போல தகுதியுள்ள மக்களுக்கு திட்டம் செல்வதில்லை என்ற நிலையும் காணமுடிகிறது. இதற்கு தரவுகள் இல்லாத அடிப்படையில் கொடுக்காததே முக்கிய காரணம். அதற்காக தான் இ- கவர்னன்ஸ் முறை நடைமுறைபடுத்த உள்ளோம். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தில் உள்ள மொத்த தரவுகளையும் கொண்டு நிர்வாகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல, தமிழகத்தை திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும் என்பது தகவல் தொழில் நுட்பதுறையின் முக்கிய குறிக்கோளாகும். புதிய கண்டுபிடிப்புகள் ஸ்டாட்டப்புகளை ஊக்குவிக்க வேண்டும், என தெரிவித்தார்.

கோவையில் உள்ள எல்கார்ட் கட்டிட பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. அதை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், கோவை மாவட்டம் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம் என்றும், தகவல் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சி பெரும்பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோவையில் ஐடி நிறுவனங்கள் அமைக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். அமேசான் உள்ளிட்ட பல்வேறு புதிய நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என கூறினார்.

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களிலும் நகரில் உள்ள வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்கிறோம், அதை இலக்காக வைத்து, 1,500 கிராமங்களில் பைபர் இணைய சேவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போல, தமிழகத்தில் ஐடி துறை பரவலாக்கப்படும், கோவை மாவட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது இந்த அரசு, 5 முறை முதல்வர் கோவைக்கு மட்டும் வந்துள்ளார். கல்வி, தொழில்துறை, கட்டமைப்பு வசதிகள் என வளர்ச்சிப் பாதையில் செல்லும் மாவட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது நமது கடமை, என தெரிவித்தார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 563

    0

    0