கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் : சிலம்பம் சுற்றி அடிமுறை சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2022, 2:25 pm
கன்னியாகுமரி : சிலம்பம் விளையாடி சிலம்பாட்ட வீரர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர் மனோதங்கராஜ் தமிழக அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டியை துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் தனியார் அமைப்பினர் நடத்திய தமிழக அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டியானது இன்று நடைபெற்றது.
இதனை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பும் விளையாடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்த தற்காப்பு கலைகள் முந்தைய காலகட்டத்தில் போர்க் கலையாக நிகழ்ந்து வந்தது .எனவே மறைந்து போன அனைத்து பாரம்பரிய கலைகள் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தற்காப்புக் கலைகள் பாரம்பரிய மருத்துவம் குறித்த ஓலைச்சுவடிகள் ஏடுகள் ஆவணங்கள் போன்றவற்றை பாதுகாத்து அதனை இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்வதற்கான மின்னணு வாக்கு செய்யப்பட்டு பாரம்பரிய ஓலைச்சுவடிகளின் விபரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும் எனது தலைமையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காப்பு கலைகளுக்கான கட்டமைப்பினை உருவாக்குகின்ற ஒரு கருத்துருவாக்கத்தை ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விரைவில் அதற்கான விரிவான திட்டம் ஏற்படுத்தப்படும் என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். சிலம்பாட்ட போட்டிகளை அமைச்சர் சிலம்பம் விளையாடி துவக்கி வைத்தது சிலம்பாட்ட வீரர்களையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.