‘மனசாட்சியோட வேலை செய்யுங்க… உங்க பிள்ளைங்களா இருந்தால் சும்மா இருப்பீங்களா..?’ – அதிகாரிகளை வசைபாடிய அமைச்சர்..!!
Author: Babu Lakshmanan7 July 2023, 6:53 pm
மனசாட்சியுடன் பணியாற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கடிந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் பூமி பூஜை மற்றும் பயணியர் நிழற்குடை திறப்பு விழாவில் பங்கேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்.
அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையில் நடுநிலைப் பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் பேபர் பிளாக் பணிக்காக 3.5 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் துவங்கி வைத்தார்.
அப்போது பள்ளி வளாகத்தில் ஆய்வு நடத்திய போது கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதை அறிந்து. உடனடியாக அதிகாரிகளை கூட்டிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அப்போது, அதிகாரிகளிடம், ‘உங்கள் பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்தால் பணிகளை செய்யாமல் இருப்பீர்களா…? அரசு நிதி ஒதுக்கி வரும் நிலையில் தங்கள் பணிகளை உடனடியாக செய்ய வேண்டும்,’ வசைபாடினார்.
தொடர்ந்து, தெழுவங்காடு ஊராட்சிக்குட்பட்ட காயக்காடு பகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டு அறிந்தார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0
0