நெல் சாகுபடி பரப்பளவை குறைக்க திட்டமா..? தமிழக அரசின் நோக்கம் என்ன..? அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம்…!!
Author: Babu Lakshmanan14 March 2022, 4:57 pm
நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி.
தமிழக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மாயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென்று குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்னும் நான்கு ஆண்டுகளில் பசுமை மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்த அவர், இயற்கை வேளாண்மைக்கு அதிக திட்டங்கள் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தெரிவித்தார்.
மேலும் நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் எண்ணம் அப்படி எதுவும் இல்லை, சிறு தானியங்களின் சாகுபடி அதிகரிக்க வேண்டும் என்றார்.
0
0