பழனி வரைக்கு வந்தாச்சு அவர பாக்காம போனா எப்படி : பாஜக முகாமில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் முருகன் பழனியில் தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 4:25 pm

பழனிகோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு,மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பழனிக்கு வருகைதந்தார்.

அப்போது பழனி கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்‌ மின் இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு மேலே சென்றார். அப்போது திருக்கோவில் சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பழனிமுருகனை சாமிதரிசனம் செய்தார். மத்திய இணைஅமைச்சர் முருகனுக்கு திருக்கோவில் சார்பில் பிராசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மின் இழுவை ரயில் மூலம் கீழே இறங்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜகவின் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!