கீழ்பவானியில் கான்கிரீட் போடும் பணியின் தற்போதைய நிலை என்ன? அமைச்ச் முத்துச்சாமி நேரடி ஆய்வு!!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2022, 2:01 pm
பவானிசாகர் அணை கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் போடும் பணி சம்பந்தமாக தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி வாய்க்காலில் பாதிப்பு உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் நேரடி பாசனமும், நிலத்தடிநீர், கசிவுநீர் குட்டை ஆகியவற்றின் மூலம் பல லட்சம் ஏக்கரில் பாசனம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கீழ்பவானி வாய்க்கால் கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் வருவதில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்ததையடுத்து, 933 கோடி செலவில் கீழ்பவானி வாய்க்கால் முழுவதும் கான்க்ரீட் போடப்படும் என அறிவித்து திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தவுடன் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிலத்தடி நீர், கசிவு நீர் பாசனம் பாதிக்கப்படும், பல லட்சம் ஏக்கர் பாசனம் பாதிக்கப்படும் என ஆதாரங்களுடன் கீழ்பவானி பாசன விவசாயிகள் அப்போதைய எதிர்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தார். இதன்படி கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் போடும் பணி சம்பந்தமாக தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று பவானிசாகர் அணையிலிருந்து வாய்க்கால் துவங்கும் இடமான தொட்டம் பாளையம் முதல் எலத்தூர் வரையில் வாய்க்கால்கரையில் இடது மற்றும் வலது கரைகளில் உள்ள கசிவு நீர் குட்டை, நிலத்தடி நீர் பாசன முறை, புவியியல் அமைப்பு, கடைமடை பாசன விவசாயிகள் பாதிக்காத வண்ணம், வாய்க்காலில் பாதிப்பு உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0
0