மெட்ரோ குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ; சாலையில் படுத்து ஆய்வு செய்த அமைச்சர் நாசர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 8:01 pm

திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, அமைச்சர் நாசர் தரையில் படுத்து ஆய்வு செய்த செயல் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு ராட்சத குழாய் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. திடீரென ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக ராட்சத குழாயில் அமைக்கப்பட்டிருந்த வால்வு-இன் உள் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வழிந்தோடியது. இது குறித்து தகவல் அறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, ராட்சத வால்வு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த அமைச்சர் நாசர், சற்றும் யோசிக்காமல் திடீரென ராட்சத வால்வு உடைந்ததை உறுதிசெய்யச் சாலையில் தரையோடு தரையாகப் படுத்து ஆய்வு செய்தார். வால்வு உடைந்து போனதை அமைச்சர் உறுதி செய்தார்.

ஆய்வின் போது அமைச்சர் திடீரென சாலையில் படுத்து ஆய்வு செய்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் இடையே மட்டுமின்றி குடிநீர் வாரிய அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ