பாகுபலி போல குழந்தையை தூக்கிய அமைச்சர் நாசர்: அரசு விழாவில் அமைச்சரின் திடீர் செயலால் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan22 August 2022, 7:46 pm
பாகுபலி சினிமா திரைப்படம் போன்று ஒரே கையில் சிறு குழந்தையை தலைக்கு மேலே பால்வளத் துறை அமைச்சர் நாசர் தூக்கியதால் அங்கிருந்தவர்கள் சற்று அதிர்க்குள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் கலந்து கொண்டார். அப்போது, திமுக கட்சி பிரமுகர் ஒருவரின் குழந்தையை ஆசையாக கொஞ்சி விளையாட முயன்றார்.
அப்போது அவர் திடீரென பாகுபலி சினிமா திரைப்பட பாணியில், தனது ஒரே கையால் குழந்தையை மேலே தூக்கியபடி நடந்து வந்தார். பின்னர் விழா முடிந்ததும் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கல்வெட்டு திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் நாசரை, கட்சியினர் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தனர்.
அப்போது, அதே குழந்தையை மீண்டும் தனது ஒரே கை மூலம் திடீரென தலைக்கு மேலே தூக்கினார். அமைச்சரின் இந்த திடீர் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.