பிரபல சிமெண்ட் நிறுவனத்தில் புகுந்து குடிபோதையில் அமைச்சர் நேரு ஆதரவாளர் ரகளை : காட்டி கொடுத்த காட்சி.. வழக்குப்பதிந்த போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan19 June 2023, 3:50 pm
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட் கம்பெனியின் உள்ளே நேற்று முன் தினம் முன்பு இரவு அத்துமீறி புகுந்து பாதுகாப்பு அலுவலர்களை தாக்கியும் நிறுவனத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக கல்லக்குடி திமுக நகர செயலாளரும், கல்லக்குடி பேரூராட்சி தலைவருமான பால்துரை உள்ளிட்ட மூவர் மீது டால்மியா சிமெண்ட் நிறுவனம் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
சிமெண்ட் தொழிற்சாலை முன்பு இரவு நேரத்தில் போதையில் ரகளை செய்ததற்கான காரணம் என்ன என்பது விசாரிக்கையில், கல்லக்குடி பேரூராட்சி தலைவராக உள்ள பால்துரை கட்சியில் கல்லக்குடி நகர செயலாளர் ஆகவும் பதவி வகித்து வருகிறார்.
அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளரான இவர் டால்மியா சிமெண்ட் ஆலையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார் அவர்களுக்கு வேலை வேண்டுமென ஆலை நிர்வாகத்தை நிர்பந்திப்பதாகவும், ஆனால் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இது போன்று ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் கள்ளக்குடி பேரூராட்சி நகரச் செயலாளருக்கான மாமூல் தொகை வழங்காதது கண்டித்தும், சிமெண்ட் ஆலை மூலம் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்ட பணிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இப்படி மேற்கண்ட எந்த கோரிக்கையையும் ஆலை நிர்வாகம் செய்து தர செவி சாய்க்காததால் ஆத்திரமடைந்த திமுக நகர செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பால்துரை, சிமெண்ட் ஆலை நிர்வாகத்தை கண்டித்து இரவில் குடிபோதையில் திமுக குண்டர்களுடன் ரகளையில் ஈடுபட்டு அங்குள்ள பொருட்களை உடைத்ததாக தற்பொழுது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
0
0