அதிமுக மதவாதக் கட்சியோ.. தேசத்துரோக கட்சியோ கிடையாது… ஆனால்…. அமைச்சர் பிடிஆர் பரபர பேச்சு..!!!
Author: Babu Lakshmanan17 April 2024, 9:53 am
அதிமுக இன்னும் பாஜகவின் பிடியில் இருக்கிறதா? என்றும், அதிமுக சுய சிந்தனையோடு சுதந்திரமாக செயல்படுகிறதா..? என்ற சந்தேகம் உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் சு. வெங்கடேசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் கேட்டு, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரப்பாளையம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் திறந்த வாகனத்தில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: அதிமுகவுக்கு ஓட்டு போடுறது வேஸ்டா? நாங்க ஓட்டுபோட்டுதான் அன்புமணி MP ஆனாரு: இபிஎஸ் விமர்சனம்!
ஆரப்பாளையம் மந்தையில் திரண்டிருந்த வாக்காளர்களிடம் அவர் உரையாற்றியதாவது :- பாஜக ஒரு பாசிச கட்சி. பொருளாதார அறிவு சற்றும் இல்லாத கட்சி. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால், பாகிஸ்தானை விட மோசமான பொருளாதார நிலைமைக்கு இந்தியா சென்று விடும்.
பாஜக வோடு ஒப்பிடும் போது, அதிமுக நல்லவர்கள். அதிமுக பாசிச கட்சி கிடையாது. அதிமுக மதவாத கட்சியோ, தேசத் துரோக கட்சியோ கிடையாது. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். அதிமுக நல்லவர்கள். ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக ஆட்சி ஐந்தாண்டு நீடிக்க மோடிஜியின் காலில் விழுந்து ஆட்சி நடத்தினர்கள்.
ஆனால் ஆட்சியை இழந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஞானோதயம் பிறந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலைத் தயார் செய்து, திமுக அமைச்சரவையில் அவர்கள் வழக்குத் தொடுக்க முடிவு எடுக்கப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு, மெத்தப்படித்த ஆளுநர் இதுவரை கையெழுத்திட்டு அனுமதி வழங்கவில்லை.
மேலும் படிக்க: CM ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… முதல்ல மருமகன்… இப்போ மகன் ; அண்ணாமலை சொன்ன தகவல்!!
இது அதிமுக மேல் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளதாக சொல்வது சுய சிந்தனையோடு சுதந்தரமாக சொல்கிறார்களா? என்பது இன்னும் தெரியவில்லை. ஜனநாயகத்தைக் காப்பாற்ற வருகின்ற தேர்தலில், மும்முனைப் போட்டியில், பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், எனக் கூறினார்.
0
0