சமூக நீதி பேசினால் ஆளுநருக்கு கோபம் வருது… இவரைப் போல மோசமான ஆளுநரை பார்த்ததில்லை ; அமைச்சர் பொன்முடி புலம்பல்..!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 7:54 pm

மதுரையில் நடைபெறும் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை மதுரையில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில் அதை புறக்கணிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறிய அவர், சங்கர் ஐயாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றம் இரண்டுமே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. சங்கரய்யாவை பற்றி ஆளுநருக்கு தெரியவில்லை என்றாலும், கேட்டிருக்க வேண்டும்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மேலும், பலமுறை போராட்டங்கள் நடத்தி 4 ஆண்டுகள் என 9 ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளார். சுதந்திரப் போராட்ட வீரருக்கு, 102 வயதிலும் மக்களுக்கு குரல் கொடுத்து வருபவருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்காமல் ஆளுநர் நிராகரித்துள்ளார். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுத்து உள்ளார். ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை, என்று காட்டமாக கூறினார்.

மேலும் பேசிய அவர், சமூக நீதி பேசுபவர்களை ஆளுநருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பட்டம் கொடுக்க கூடாது என்று நினைக்கிறார், சங்கரய்யாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆளுநர் விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி, பட்டம் கொடுக்க மறுக்கிறார் என்றால், ஆளுநரை என்னவென்று சொல்வது என்றும், நடிப்பு சுதேசியாக ஆளுநர் இருப்பது வருந்தத்தக்கது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கு ஆதரவாக தான் ஆளுநர் இவ்வாறு நடந்துக்கொள்கிறார் எனவும், ஆளுநர் ஒரு nominal executive, மாநில அரசு real executive, தமிழக அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதை செய்ய வேண்டியவர் தான் ஆளுநர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்ணா, கலைஞர், தளபதி யாராக இருந்தாலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆளுநருக்கு அக்கறை இருந்தால் பட்டம் கொடுக்க வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளுநரை போன்று சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும், ஆளுநர் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஆதரவாக தான் இது போன்று செய்கிறார் என்று பேசினார்.

ஆளுநர் பல்வேறு கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார். தமிழக அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதை செய்ய வேண்டியது தான் ஆளுநர் வேலை, மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் மாநில ஆளுநர் செயல்படுகிறார் என்றால் கண்டிக்கதக்கது. தமிழ்நாடு ஆளுநரை போல் மோசமான ஆளுநர் இதுவரை இருந்ததில்லை. இவரைப் போல் தவறு செய்தவர்கள், பொய் பேசுபவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழக ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், என பேசினார்.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆளுநர் மறுத்து உள்ளதால், நாங்கள் மதுரை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் என்ன எண்ணத்தில் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. வேந்தர் என்று பதவியை பயன்படுத்தி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆளுநர் நினைக்கிறார். பல்வேறு பல்கலைக் கழகத்தில் வீ.சி. பதவி காலியாக உள்ளது, வீ.சியை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டும், திராவிட மாடல் என்றால் ஆளுநருக்கு கசப்பாக உள்ளது, தமிழ்நாட்டை பொருத்தவரை திராவிட மாடலை யாராலும் அசைக்க முடியாது என மீண்டும் ஒரு முறை காட்டமாக கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 300

    0

    0