அமைச்சர் பொன்முடி கார் மோதி விபத்து… தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!
Author: Babu Lakshmanan9 May 2023, 12:54 pm
கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி சென்ற கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் தேரடி வீதியில் நடைபெற்ற திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். பின்னர், மீண்டும் நெல்லிக்குப்பம் வழியாக விழுப்புரம் சென்றபோது, அவருடைய கார் சாலையில் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன ஒட்டி ஜோதி என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு காவல்துறையினர் விபத்தில் சிக்கியவரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அமைச்சர் பொன்முடி விழுப்புரம் புறப்பட்டு சென்றார்.
தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சரின் கார் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.